''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''
செங்கல்பட்டில் ஈழத் தமிழர்கள்
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக சில மாதங்களுக்கு முன், ஈழத் தமி ழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்ற உண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு இதுகுறித்து நம்மிடம் பேசினார். 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதா னவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது. அந்த வழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பிறகும் மத்திய அரசுக்குக் கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள். அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்'' என்றார்.
உண்ணாவிரதம் இருப்பவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ரமணியன் ஆகியோர் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணாவிரதம் தொடர்கிறது.
பேச்சுவார்த்தைக்குச் சென்ற தாசில்தார் இளங்கோவன், ''இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்கொள்ளுங்கள்'' என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்புகொண்டும் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.
என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
- செ.திலீபன்
COMMENT(S): 32
அவர்களுக்கு இங்கு என்ன வேலை? உடனடியாக திரும்பலாமே. கனடாவை கெடுத்தது போல், கெடுத்து விடுவார்கள். அவர்களுக்கு,சீங்களவன் தான் சரி. உலகத்தில், எந்த நாட்டிற்கு சென்றாலும்,இவர்கள் தொல்லையே.லண்டன் இவர்களுடைய அட்டகாசத்தை இன்னமும் பொறுக்காது என்று தெரிகிறது.
சந்துரு அவர்களே,
நீங்கள் முதலில் கனடாவில் வசிப்பவரா? நான் ஒரு தமிழ்க்கனேடியன். கனடா ஈழத்தமிழர்களால் எந்த அளவிற்கு கெட்டிருக்கிறது என்று விவரித்தால் நன்றாக இருக்கும்.
நீங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக பதிவதெல்லாம் குப்பை. டொராண்டோவும், லண்டனும் ஈழத்தமிழர்களால் எந்த அளவிற்கு பாதிக்கப்படீருக்கிறது என்று எந்த மீடியாவிலும் செய்திகள் இல்லாதபோது ஏன் இப்படி வெறுப்பினை உமிழவேண்டும். சொல்லப்போனால் படு டாம்பீகமாக உரை நிகழ்த்தச்சென்ற ராஜபக்ஷே இவர்களது ஆர்ப்பாட்டங்களினாலும் தொடர் முற்றுகையினாலும் லண்டனிலிருந்து பார்சல் வண்டியின் மூலம் விமான நிலையத்திற்கு பொட்டலமாக கட்டி தகுந்த மரியாதையுடன் வீடனுப்பப்ப்ட்டார். அதற்காக உங்கள் அடிவயிறு குமைகிறதா என்ன?
நீங்கள் கனடாவிலிருப்பவர் என்றால் உங்களுக்கு அங்கு என்ன வேலையோ அது போலத்தான் அங்கிருக்கும் ஈழத்த்மிழர்களுக்கும். நீங்கள் முடிசூடா மன்னனாக தமிழநாட்டிற்கு திரும்பி தொடர் மின்வெட்டினாலும், குடிநீர் பற்றாக்குறையினாலும், சாக்கடை நிரம்பும் குப்பைகூளத்தில் டெங்கி கொசுக்களுடன் கம்பீரமாக வாழலாமே? செய்யுங்களேன். வெட்கி தலை குனியவேண்டிய நீங்கள் (இதில் என்னையும்தான் நான் சேர்த்துக்கொள்ளவேண்டும்) என்னவோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கதை விடுகிறீர்கள்.

என்ன அட்ட காசம் செய்கிறார்கள் என்று சொல்லலாமே.
என்ன அட்ட காசம் செய்கிறார்கள் என்று சொல்லலாமே.
இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழர்களால் இந்தியத்தமிழன் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறான் என்று திருச்சியில் வந்து பார்த்தால் தெரியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் லண்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அனுப்பும் லட்ஷக்கணக்கான பணத்தைக் கொண்டும் மற்றும் கடத்தல் வழிகளில் கிடைக்கும் பணத்தில் அண்ட வந்த ஊரையே வளைத்து போட்டு வருவாய்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, என அனைத்து துறைகளையும் விலை பேசி பத்திரப்பதிவுத் துறையிலும் கோலோச்சிக் கொண்டு, காலி மனை, வீடு. வீட்டு வாடகை, மீன், மட்டன் என அனைத்து பொருட்களும் சாதாரண மக்களால் வாங்க இயலாத நிலையை ஏற்படுத்தியும் வருகின்ற நிலை இலங்கை தமிழன் பெயரைச்சொல்லி பணம் பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்தும் பணம் வந்தால் போதும் என ஊமையாய் இருக்கின்ற்னர். கே.கே.னகர், சீனிவாச நகர் போன்ற பகுதிகளில் செயின் பறிப்பு, பெண்களை கேலி செய்தல், பாரில் அடிதடி, லட்சரூபாய் மதிப்புள்ள டூ வீலரில் அளவுக்கு அதிக வேகத்தில் செல்வது, சட்டத்தை மதிக்காத தன்மை, காவல் நிலையத்தில் செல்வாக்கு என இந்தியத்தமிழனை கேவலப்படுத்தி வசதியாக வாழ்ந்து தமிழனை துச்சமாக பாவித்து வரும் இவர்களை தொப்புள்கொடி உறவு, மண்ணாங்கட்டி என எழுதி நீங்களும் வக்காலத்து வாங்குவது சரியாக படவில்லை. அகதிகள், அண்ட வந்தவர்கள், ஒண்ட வந்தவர்கள் திரும்ப அவர்களது ஊருக்கே செல்ல வேண்டியது தானே. அகதி போர்வையில் ஆடம்பர வாழ்வு, உண்ணாவிரதம், போராட்டம் தேவையா. விரைவில் தமிழ் நாட்டில் தமிழன் அகதியாக நேரிடும்.
ஊருக்கு திரும்பி போலாமே..
லலிதா அவர்களே இவர்கள் பூர்வீகம் தமிழகம் அல்ல.இலங்கை.தமிழ்கத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் மலையக தமிழர்கள் இன்னும் இலங்கை தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகள் போல் நடத்தபடுபவர்கள். இங்கே உள்ளவர்கள் திருப்பி அனுப்பபட வேண்டியவர்கள். அரசு ஏன் இன்னும் இதை செய்யாமல் உள்ளது என்பது கேள்விக்குறி. ஜூவி யும் சும்மா தொப்புள் கொடி முல்லை கொடி என்று சென்டிமென்டாக எழுதிகொண்டு ஈழ வியாபாரிகளுக்கு துணை போய் கொண்டிருக்கிறது.
இவர்களை வேலை செய்து பிழைத்து கொள்ள சொல்ல வேண்டியது தானே? வேலை செய்ய ஆள் இல்லாமல் அசாமிலிருந்து வந்து வேலை செய்கிறார்கள்.
கஷ்டப்பட்டாவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா? ஓடிச் செல்ல வேண்டியதுதானே பிறந்த ஊருக்கு? ஒண்ட வந்தது நாட்டாமை செய்கிறது.
20 வருடங்களா இருக்கும் இவங்களை ஏன் இப்படி சித்ரவதை செய்ராக. இவர்களின் பூர்வீகம் தமிழ்னாடுதானே ,மனிதனை மனிதனாக பார்க்கவே மாட்டாங்களா, பல சமயம் காவல்துரை தன்னை மக்களீன் நண்பன் என்ரு சொல்லிக்குது ஆனால் உண்மைலே>>
போர் என்ட்ரால் மக்கள் சாவத்தானே செய்வார்ர்கள் என்ற பொன்மொழி ய அவுத்துவுட்ட ஆட்சி யில வேற என்ன செய்யமுடியும்
"என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!"...என்ன்ய்யா கதவிடுற...கொடி உறவும் இல்லை பொடி உறவும் இல்லை...தொப்புளாவது கொப்புளவது...போட்சொல்லுயா ஊறப்பாத்து...!
போய் பாருங்கப்பு.. சிங்களவன் அடிப்பான் ஆப்பு... ஓடுங்க ஒடுங்க..
தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர்களை மனிதநேயதுடன் நடத்துவதில்லை என்ற குறைபாடு நிரந்தரமான ஒன்று. ஈழத்திலுள்ளோரைப் பற்றி காவலைப் படுவதோடு இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாமே.
இவங்களை தமிழகம் கண்டுகொள்ளவில்லை.....தமீழீழ ஆதரவு தலைவர்களும் கண்டுகொள்ளமாட்டார்கள்....
இவர்களிடம் டாலர் இல்லையே....
சைமன்களும்,நைனாக்களும்... எப்போதும் வானத்தையே அன்னாந்து பார்ப்பார்கள்..... கீழே குனிந்து பார்க்கும் எண்ணமே இல்லை....

இவர்களிடம் டாலர் இல்லையே....
சைமன்களும்,நைனாக்களும்... எப்போதும் வானத்தையே அன்னாந்து பார்ப்பார்கள்..... கீழே குனிந்து பார்க்கும் எண்ணமே இல்லை....
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு(தி.மு.க மற்றும் அ.தி.மு.க ) ஈழமக்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை, தேர்தல் சமயத்தில் மட்டுமே ஈழமக்களின் நலன் பற்றி பேசுவார்கள்.
தமிழர் நலன்கள் மீது உண்மையான அக்கறை உள்ள கட்சியின் ஆட்சி அமைக்க தமிழகமக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்
தமிழர் நலன்கள் மீது உண்மையான அக்கறை உள்ள கட்சியின் ஆட்சி அமைக்க தமிழகமக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்
ஈழத்தில் யுத்தம் முடிந்துவிட்டது... தமிழகத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் விரும்பினால் இலங்கைக்கு செல்ல நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்... அல்லது அவர்கள் விரும்பினால் இந்தியக்குடியுரிமை பெற்று இங்கேயே வாழ வழிவகை செய்யவேண்டும்... இப்படியா போட்டு கொடுமைப்படுத்துவது?...
என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
அப்படி ஏதாவது இருக்கா?
பொங்கள் போனஸ் போட்டாச்சா? தீபாவளி அரியர்ஸ் வந்துடுச்சா?
லஞ்சக்காசுல தீவு ஏதாவது விலைக்கு கிடைக்குமா?
அப்படி ஏதாவது இருக்கா?
பொங்கள் போனஸ் போட்டாச்சா? தீபாவளி அரியர்ஸ் வந்துடுச்சா?
லஞ்சக்காசுல தீவு ஏதாவது விலைக்கு கிடைக்குமா?
No comments:
Post a Comment