Tuesday, 1 April 2014

முடி உதிரலாம்... உயிர்?

''இல்லம்மா... இந்தப் பொண்ணுங்க எல்லாரும் பார்க்க அசிங்கமா இருப்பாங்க... அதான் மத்தவங்க பார்த்துப் பயந்துடக் கூடாதுனு இப்பிடி மூடிக்கினு போறாங்க.'''''ஏம்பா இந்தப் பொண்ணுங்க எல்லாரும் முகமூடிக் கொள்ளைக்காரங்க மாதிரி முகத்தை  மூடிக்கிட்டு வண்டி ஓட்டுறாங்க?' 
'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் இடம்பெற்ற கலாய்ப்பு காட்சி இது. கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு முகமூடிக் கொள்ளையனைப்போல், முகத்தில் துப்பட்டாவினால் மூடியபடி, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்கள் ஏராளம். வாகனப் புகை, தூசு படாமல் இருக்க கைகளுக்குப் பாதுகாப்பாக உறை அணிந்துகொண்டு பெண்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
ஹெல்மெட் அணியாததற்கு என்ன காரணம்?  கல்லூரி மாணவிகளிடம் அக்கறையுடன் ஓர் அலசல்!
 
அகல்யா:
''நான்  டூ வீலர் வாங்கின புதுசுல ஹெல்மெட் பயன்படுத்தினேன். அப்பறம் போகப் போக ஹெல்மெட் போட்டாலே கழுத்து வலி. வெயிட் குறைவா இருக்கும் ஹெல்மெட்  வாங்கலாம்னு நிறையக் கடைகளில் தேடினேன். எல்லாமே ஒரே மாதிரிதான் இருந்துச்சு.  அது மட்டும் இல்லாம ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுறப்ப பின்னாடி வர்ற வண்டிகளைத்  திரும்பிப் பார்க்க சிரமமா இருக்கு. நிறைய தடவை கழுத்து வலியால் அவஸ்தைப்பட்டிருக்கேன்.  எடை குறைவான, அதே நேரம் தரமான ஹெல்மெட் கிடைத்தால், காட்டாயம் போடுவேன்.''  
காயத்ரி:
''வீட்ல இருந்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டிட்டு கிளாஸ் ரூமுக்குப் போனதும், என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், தூங்கி எழுந்து அப்படியே காலேஜ் வந்துட்டியானு கிண்டல் பண்ணுறாங்க. ஹெல்மெட் போடுறதனால முகம் எல்லாம் வியர்த்துப்போய் ஸ்கின்னே ஒரு மாதிரி ஆயிடுது.  கரும்புள்ளி, பரு தொந்தரவு வேறு. தலை முடி ரொம்பவே கொட்டுது. ஹெல்மெட் போட்டு, பாதுகாப்பாப் போகணும்னுதான் ஆசை.  ஆனா, ஹெல்மெட் போடறதுனால ஏற்படற பாதிப்பு, ரொம்பவே  எரிச்சல்!''  
ஸ்ரீ வித்யா:
''தலையில முடி அதிகமா இருக்கிறதால ஹெல்மெட் போடவே சிரமமா இருக்கு. முடி கொட்டுது.  பூ வைக்க முடியல. தலையை மட்டும் கவர் பண்ணுற மாதிரியான ஹெல்மெட்தான்  பயன்படுத்துறேன். இது பாதுகாப்பு இல்லைன்னு தெரியும். ஆனா, என்ன பண்ணுறது. தலை முழுதும் மூடும் ஹெல்மெட் பயன்படுத்தினால், பின்னால வர்ற வண்டிகளோட ஹாரன் சப்தம் சரியாக் கேட்கமாட்டேங்குது.''
பாதுகாப்பான ஹெல்மெட் தேர்ந்தெடுப்பது எப்படி? 'ஹெட் கியர் ஹெல்மெட்’ கடையின் விற்பனையாளர் திருமதி புஷ்பாவிடம் கேட்டோம்.  
''ஹெல்மெட்களில் பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் என இரண்டு வகைகள். அதில் ஃபைபரில் தயாரிக்கப்படுவதுதான் தரமான, பாதுகாப்பான ஹெல்மெட். சாலை ஓரமாக குறைந்த விலைக்கு விற்கப்படும் ஹெல்மெட்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் வகையாகத்தான் இருக்கும். இதனால், டூ வீலர் ஓட்டுபவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு உத்தரவாதமும் கிடையாது. ஃபைபர் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்களில், ISO சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கும்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் கூறும் குறை, 'ஹெல்மெட்டில் முன்பக்க முகக் கண்ணாடி  சீக்கிரத்திலேயே உடைந்துவிடுகிறது’ என்பதுதான். அதுபோல் இல்லாமல், இப்போது தரமான ஹெல்மெட்கள் நிறைய கிடைக்கின்றன.
நாளுக்கு நாள் அதிவேகத் திறன்கொண்ட வாகனங்கள் புதிது புதிதாக வருகின்றன.  உயிர்ப் பாதுகாப்பு மிக முக்கியம். ஒருசில சாதாரணப் பிரச்னைகளுக்காக உயிர் என்கிற மகத்தான ஒன்றைப் பற்றி அசட்டையாக இருந்துவிடக் கூடாது.''
ஹெல்மெட் அணிவது குறித்து பொது மருத்துவர் அருள் இப்படிச் சொல்கிறார்.
''ஹெல்மெட் அணிவதைப் பெரும்பாலும் பலர் தவிர்ப்பதற்கு முக்கியமான காரணம் அசௌகரியம்தான். சிலர் யூடர்ன் அடிக்கும்போது பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது என்று தவிர்க்கிறார்கள். சிலர் ஹாரன் சத்தம் சரியாகக் கேட்கவில்லை என்கிறார்கள். முக்கால் சதவிகிதம் பேர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு காரணமே முடி கொட்டிவிடும் என்கிற அழகியல் அச்சம்தான்.
ஹெல்மெட் அணியும்போது, நம் தலை மீது  அழுத்தம் ஏற்பட்டு, வியர்வை அதிகமாக வெளியேறும்.  இதனால் அரிப்பு உண்டாகும். அதிகநேரம் ஹெல்மெட் அணிந்துகொண்டே இருந்தால் 'மிலியரியா’(Miliaria) என்ற சரும நோய் வந்து தலையில் கொப்புளங்கள் உருவாகும். இரண்டாவது பிரச்னை, முடி கொட்டுதல்.
மேலே சொன்ன இரண்டு விளைவுகளும் தற்காலிகமானவைதான். அரிப்போ, கொப்புளங்களோ வந்தால் சரிசெய்துவிடலாம். முடி கொட்டின£ல், திரும்ப வளர்ந்துவிடும். ஆனால், ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்து நேரிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் நிரந்தரமானவை, வலி மிகுந்தவை. ஹெல்மெட் அணியாமல் போனால், விபத்து ஏற்பட்டு உடலில் நிரந்தர ஊனத்தையும் தந்துவிடலாம். தற்காலிகப் பிரச்னைகளுக்காக, நிரந்தர வாழ்க்கையையே பறிகொடுப்பது அறிவார்ந்த செயலா என்று சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நல்ல தரமான, நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்களை மட்டுமே வாங்க வேண்டும். தலையின் மேற்பகுதி மட்டும் மூடப்பட்டு கழுத்தில் ஸ்ட்ராப் மாட்டுவதுபோல உள்ள ஹெல்மெட்களைத் தவிர்க்கவும். முகத்திற்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத அதுபோன்ற ஹெல்மெட்களால் ஒரு நன்மையும் இல்லை.
நம் வாழ்க்கையில் நாம் பல்வேறு அசௌகரியங்களை பொறுத்துக்கொள்கிறோம். ஹெல்மெட் அணியும் சின்ன அசௌகரியத்தைப் பொறுத்துக்கொண்டால், பாதுகாப்பாக வண்டி ஓட்டுவது மட்டும் அல்லாமல் உங்களது மேலான, விலை மதிப்பற்ற உயிரைப் பாதுகாத்து வளமாகவும் நலமாகவும் வாழலாம்!'
- கட்டுரை மற்றும்
படங்கள்: செ.திலீபன்

COMMENT(S): 6

Brain injury even if cured may cause problems at a later stage of life. It had happened to football players in America who had concussions during play. Even the boxers had suffered because of brain injury. In America and in Canada even people who ride bikes must wear helmets. If the cops find you riding bikes without helmet they may give tickets. Even if you lose all the hair, it is okay when compared to losing life or remaining in coma for yeas together thereby causing agony to your family and self.
சமீப காலமாக விகடனில் வந்த கட்டுரைகள் பயனற்றவையாக இருந்தது, அனால் இந்த article is excellent, very useful.
ஹெல்மட் ஒரு முக்கியமான விஷயம் ப்ளீஸ் கேர் அபௌட் யுவர் ஹெட் முடி போன கிடைக்கும் தலை போன .......?
Head injury (தலைக் காயம்) ஏற்பட்டால் உண்டாகும் துயரமும், பணச் செலவும், ஏன், குடும்பமே சீர்குலையக் கூடிய கொடூரமான நிலையையும் உணர்ந்த, அறிந்த யாரும், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டத் துணியவே மாட்டார்கள். தயவு செய்து Head injury யைப் பற்றி Internet ல் வாசித்துப் பாருங்கள்.. முடியோ, வேர்வையோ, பருவோ, பூவோ.... எல்லாமே மறந்துவிடும்... தயவு செய்து உங்களுக்காகவும், உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்திற்காகவும் அவசியம் ஹெல்மெட் அணியுங்கள்....
ஹெல்மெட் ஒரு கட்டாய தேவை.போடலன்னா தண்டனையை அதிகமாக்குங்கள் ........
பொண்ணுங்க ஹெல்மெட் போடலைனாலும் போலீஸ் பிடிக்காது, அதனால அவங்க ஹெல்மெட் போடமா சுத்தறாங்க. இன்னுமொரு விஷயம் நான் ஆராய்ந்து கண்டுகொண்டது , பொண்ணுங்க சிக்னல்ல கோட்டை தாண்டிதான் நிறுத்தறாங்க. அதுல என்ன யார் புடிப்பாங்கன்ற ஒரு திமிர்தனம் இருக்கும். புடுச்சி உள்ள போடுங்க சார் யாரா இருந்தாலும்... பெண்கள் என்றால் போலிசுக்கு ஒரு சாப்ட் கார்னர்.

Saturday, 15 March 2014

நல்லா இருக்கீங்களா?
இயக்குநர் வெற்றிமாறன்
'எனக்கு எதிரியே இல்லை...’ என்று எண்ணும் ஒரு மனிதன் உதிர்க்கும் வார்த்தை... 'நல்லா இருக்கீங்களா’. இந்த ஒரு வார்த்தை போதும்.  வாஞ்சையோடு வாழ்வில் நடந்த சந்தோஷத் தருணங்களையும், சோக நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ள வைக்கும். வெற்றிப் படங்கள் தந்து,  விருதுகளைக் குவித்த இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து, 'நல்லா இருக்கீங்களா’ என்றோம்...
'நடுவுல கொஞ்ச காலம் நல்லா இல்லாம இருந்து... இப்ப ரொம்ப நல்லா இருக்கேன். சின்ன வயசுல அறியாமையில் செய்யும் சில தவறான பழக்கங்கள், காலம் கடந்துதான் அதன் பாதிப்பை நமக்கு உணர்த்தும். அதில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டு மீண்டிருக்கேன். அதனாலேயே நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.... அந்தப் பழக்கம் சிகரெட்.
பள்ளிக்கூடத்தில் படிக்கிறப்ப ஆரம்பிச்ச பழக்கம். காரணம், என்னன்னு சரியா சொல்லத் தெரியலை. 13 வயசுல முதல் சிகரெட். சின்ன வயசுல வீட்டுல மறைச்சுவைக்க ஈஸியா இருக்கும். அன்னைக்கு அது சந்தோஷமான ஒண்ணாத் தெரிஞ்சது. சிகரெட் இல்லாம ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாமப்போறப்பதான், அதுக்கு அடிமையாகி இருக்கோம்னு தோணுச்சு. ஒரு நாளைக்கு 190 சிகரெட் பிடிக்கும் நிலைமைக்கு வந்துட்டேன்.''
''கேட்கவே அதிர்ச்சியா இருக்கே..?''
''இன்னொண்ணு சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... ஒரே ராத்திரியில் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்.
'கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திக்க’னு அம்மாவும் நண்பர்களும் பலமுறை சொல்வாங்க. அப்பல்லாம் யார் பேச்சையும் கேக்கலை. ஆனா, திடீர்னு எனக்கே தோணுச்சு... சட்டுனு நிறுத்திட்டேன். யார் என்ன சொன்னாலும், நம்ம மனசு என்ன சொல்லுதோ... அதைத்தான் நாம செய்றோம்ங்கிறது என் விஷயத்தில் ரொம்பவே சரியா இருந்தது. நிறுத்தின முதல் நாள், ரொம்பக் கஷ்டமா இருந்தது. நிறையக் கோபப்பட்டேன்.
சிகரெட் பிடிக்கணும்னு தோணும்போதெல்லாம், ஜில்லுன்னு தண்ணீரை நிறையக் குடிப்பேன். எனக்குப் பிடிச்ச விஷயத்தைப் பத்தி யோசிப்பேன். முதல் மாசம் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அடுத்த ரெண்டு மாசம் இன்னும் கஷ்டமா இருந்தது. மூணாவது மாசம் கடந்ததும் நிறுத்த முடியும்னு நம்பிக்கை வந்தது.''
''மறுபடியும் எப்பவாவது சிகரெட் பிடிக்கணும்னு தோணுச்சா?''
''அய்யோ... தினம் தோணும் பாஸ். சிகரெட்டை நிறுத்துறது ஈஸி. அதை மறுபடியும் பிடிக்காம இருக்க, தினம் போராடிக்கிட்டே இருக்கணும். இடையில இரண்டு முறை கட்டாயம் வேணும்னு மனசு சொல்லுச்சு.''
''அப்ப என்ன பண்ணீங்க..?''  
''மதுரையில் 'ஆடுகளம்’ பட ஷூட்டிங். ரொம்பக் கோபத்தில் இருந்தேன். என் உதவி இயக்குநர்கிட்ட சிகரெட் வாங்கிட்டுவரச் சொன்னேன். 'இதோ வாங்கிட்டு வர்றேன்’னு போனவன் ரொம்ப நேரம் ஆகியும் வரவே இல்ல. கோபமாகி இன்னொரு உதவி இயக்குநர்கிட்ட கேட்டேன். அவனும் சிகரெட் பிடிக்கிறவன்தான். 'என்கிட்ட இல்ல சார்... கடைக்குப் போய் வாங்கிட்டு வரட்டுமா?’னு மழுப்பினான். போங்கடான்னு நானே வண்டியை எடுத்துக் கிளம்பிட்டேன். அப்புறம் என் நல்லதுக்குத்தானே அவனுங்க தயங்கி நின்னாங்கன்னு தோணுச்சு. சரி... காலையில பார்த்துக்கலாம்னு மனசு சொல்ல, நல்லாத் தூங்கி எழுந்தேன். அப்புறம் எதுவும் தோணலை.''
''சிகரெட் பிடிச்சா கற்பனை வளம் பெருகும்னு சொல்றாங்களே..?''
''அதெல்லாம் எதுவும் வராது. சும்மா அது ஒருவித போதை. புதுசா ஓர் அனுபவம் கிடைக்கிறப்ப, புது இடங்களுக்குப் போறப்ப, டென்ஷனா இருக்கறப்ப 'தம்’ அடிக்கணும்னு தோணும். இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு காரணத்தை வைச்சு நிக்கோட்டினுக்கு அடிமையாகுறாங்க. குறிப்பா பள்ளி, கல்லூரி வாழ்க்கையில்தான் தவறு நடக்குது. அந்தக் கட்டத்தை ரொம்பக் கவனமா கடந்து வரணும்.''
''இப்ப எப்படி உணர்றீங்க சார்?''
''ஸ்மோக் பண்றதை நிறுத்தி அஞ்சு வருஷம் ஆகுது. ரொம்ப நிம்மதியா இருக்கேன். முன்பெல்லாம் அடிக்கடி டீ குடிப்பேன். இப்ப அதையும் நிறுத்திட்டேன். இப்போ கிரீன் டீ குடிக்கிறேன்.
கொஞ்ச காலமா ஜிம்ல வொர்க்அவுட்ஸ் பண்ணிட்டு இருக்கேன். பெரும்பாலும் காலையில் சத்துமாவில் செஞ்ச தோசை, இட்லி. மதியம் குறைவான அளவு சாதம், அதிகம் காய்கறிகள் சாப்பிடுறேன். கிரீன் ஆப்பிள், பழங்கள் எடுத்துக்கிறேன்...'' என்கிற வெற்றிமாறன், அன்பானவர்களுக்குச் சொல்லும் விஷயம்:
''ஒருமுறை நிக்கோடினுக்கு அடிக்ட் ஆகிட்டா, அது, வளர்ச்சிப் பாதைக்குப் பெரும் தடையா இருக்கும். செய்யும் வேலையில் ஒழுங்கு இருக்காது. எதையும் நேரத்துக்குச் செய்ய முடியாது. புகைபிடிக்கும் நினைப்பு, நிழல் மாதிரி கூடவே வரும். அதனால், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும் குடும்பத்தின் மீது பற்றுதலும் இருந்தால் சிகரெட்டைத் தொடாதீங்க... உடனடியாக நிறுத்தும் முயற்சியைத் தொடங்குங்க!''  
புகழ் திலீபன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
 சிகரெட்டை மறக்கடித்த 'சீக்ரெட்’!
ஸ்மோக் பண்றதை நிறுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல, சுத்தி இருக்கிறவங்ககிட்ட, 'சிகரெட் பிடிக்கிறதை நிறுத்தப்போறேன். நிறையக் கோபப்படுவேன். பொறுத்துக்கங்க’னு முன்கூட்டியே சொல்லிடுங்க. நம்மைச் சுத்தி இருக்கிறவங்கதான் நமக்குப் பலம். அவங்களோட ஒத்துழைப்பு இல்லாம எதுவும் முடியாது.
ஸ்மோக் பண்றதை நிறுத்தும்போது, முதல் நாள் நல்லாத் தூங்குங்க. நிறையப் பசி எடுக்கும். ரொம்பக் கோபம் வரும். அதுபோக்குல விடுங்க.  
ஒரு எதிரியைப் பார்க்கிற மாதிரி நிக்கோட்டினைப் பாருங்க. ஜிம் போய் நிறைய வொர்க்அவுட்ஸ் பண்ணுங்க. புகையை நிறுத்த அதுவும் உதவியா இருக்கும்.  
நெருக்கமான இடங்களைத் தவிர்த்து, நல்ல இயற்கைச் சூழலை ஏற்படுத்திக்குங்க.
எனது அஞ்சல் தலை!
செ.திலீபன், படம்: உசேன்
நீங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருக்கத் தேவையில்லை. உலக சாதனைகள் பல படைத்த இந்தியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அட... அவ்வளவு ஏங்க... 'தமிழன்’ பட விஜயாகக் கூட இருக்க வேண்டாம். ஆனால், உங்கள் முகமும் இந்தியத் தபால்தலையில் இடம்பெறும்!
'அந்த அளவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலையே!’ என்று நீங்கள் பதற வேண்டாம். தபால் துறை சேவைகளை அனைவரும் பயன்படுத்த, துறையின் லாபத்தை உயர்த்த உங்கள் முகம் பொறித்த தபால் தலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது இந்தியத் தபால் துறை. திட்டத்தின் பெயர் 'எனது அஞ்சல் தலை’!  
திட்டத்தை விரிவாக விளக்கினார் சென்னை துணைத் தலைமை அஞ்சலக அதிகாரி தாமோதரன். ''ஏற்கெனவே உத்தரப்பிரதேசம் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களில் 'எனது தபால் தலை’ திட்டம் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களின் புகைப்படத்தைத் தபால் தலையாக வெளியிட்ட பரிசோதனை முயற்சி வெற்றிபெற்ற பிறகே,  இப்போது தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறப்புத் தபால் தலைச் சேகரிப்பு மையங்களில் ஒரு விண்ணப்பம் வாங்கி, அதைத் தெளிவாகப் பூர்த்திசெய்ய வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், உங்கள் புகைப்படத்தை இணைத்து விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் விண்ணப்பத்தைச் செலுத்திய நாளில் இருந்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் உங்கள் புகைப்படத்தில் அச்சடிக்கப்பட்ட 12 தபால் தலைகள் உங்கள் வீடு தேடிவரும். இதை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம்!'' என்றார்.  
தபால் துறையை மேம்படுத்த, நம் முகத்திலும் போஸ்ட் ஆபீஸ் சீல் குத்து விழ, உங்கள் காதலனோ, காதலியோ, குழந்தையோ 'அட!’ என்று ஆச்சர்யப்பட, நீங்களும் ஒரு தடவை விண்ணப்பம் செய்யலாமே?

COMMENT(S): 20


நல்ல கூத்து ....
இனி கட்சிகள் தங்கள் தேர்தல் சின்னத்தில் தபால் தலை அச்சடித்து அந்த கவரில் பணமும் வைத்து வீடு வீடாக இரவில் செருகி வைக்கலாம்...
விளம்பரம் என்றால் ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடிக்கும்! எனவே, தபால் துறைக்கு வருமானம் அதிகரிக்க, தன் படம் போட்ட ஸ்டாம்பை இலவசமாக "அம்மா ஸ்டாம்ப்" வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யலாம்.
எனது குழந்தைகளின் படம் வெளியிட அரசின் அடையாள (படத்துடன்) அட்டைக்கு எங்கே போகட்டும்...
நம் முகத்திலும் போஸ்ட் ஆபீஸ் சீல் குத்து விழ,******** கருணா, மன்னுமோகன், சோனியா படங்கள் பொருத்தாமா இருக்கும்.
அப்படியே, கரன்ஸியிலும் நம்ம படத்தை போட்டுக்கலாமா ?
Good finally we copied 1 useful Idea from countries like Singapore.
300க்கு 12 என்றால் ஒரு ஸ்டாம்பின் விலை ரூ.25ஆ... இல்லை அதற்க்கு விலையே கிடையாதா...நம் அழகு முகம் வெளியே தெரியாத மாதிரி போஸ்ட்மன் சீல் குத்துவாரா...
நான் சே.குவேரா வின் ஸ்டாப் வாங்க ஆசைபடுவேன்.....
பிடித்தவர்கள் ஸ்டாம்ப்பை நக்கி ஒட்டலாம். பிடிக்காதவர்களை காறித்துப்பி ஒட்டலாம்.
தமன்னா, நமீதா போன்ற, நடிகைகளின் படம், அதுவும், கவர்ச்சியாக வெளியிட்டால்.... பசையே வேண்டாம்... ஒட்டறதுக்கு ஜொள்ளு போதும்...
இப்போதெல்லாம் மேஜை கேலண்டர்கள், குழந்தைகளின் புத்தக லேபிள்கள் , இவற்றிலெல்லாம் நம் புகைப்படங்களை பிரிண்ட் ஒட்டிக் கொள்ளும் வசதி வந்து விட்டதே.. இருந்தாலும், தேசிய அளவில் செய்யப்படும் ஒரு சேவையை, பெரிய தலைவர்களையும் நிகழ்ச்சிகளையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வெளியிடப்படும் தபால்தலைகளை சாதாரண மக்களின் படங்களுடன் வெளியிடுவது ஏற்புடையதாயில்லை.
ஈமெயிலும் , செல்போனும் நாளுக்குநாள் புதிய கோலத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில் தபால் துறையின் வருமானத்தை பெருக்க நல்ல உத்திதான்.
வரலாறு முக்கியம் அமைச்சரே....என்ற வசனம் தான் நினைவிற்கு வருகிறது 
நல்ல காபி. stamps.com.
கனடாவில் நம்ம தமிசர்கள் பிரபாகரனின் போட்டோவை ஸ்டாம்ப் செய்து கொள்வார்கல். நம்ம தமிளர்கள் இன தலிவர் கருணாவின் போட்டோவை ஸ்டாம்பாக செய்து அவருக்கு நன்ரி சொல்லலாம். இதில் வருமானம் வந்தால் அவருக்கு 80% கமிசன் கொடுத்துடலாம்.