Tuesday, 4 February 2014

இயற்கை ஈரப்பதனிகள்!
செ.திலீபன்
   மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும்  குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மலைப் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

COMMENT(S): 31


லெமன் கிராஸ் (Lemon Grass) மற்றும் நமது நொச்சி செடிகளை மறவாதீர்கள். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றும் ஆற்றல் கொண்டவை. சென்னை மாநகராட்சியும் நொச்சி இலைகளை வைத்து கொசுக்களை விரட்ட முயற்சி செய்துவருகிறது!

ஜெயகுமார்: சில நம்பிக்கைகள் இன்னும் உண்டு. எனக்கு தெரிந்த சில பலன்கள் இதோ .
வாழை மரம் - சந்ததியை பெருக்கும்.
கல்யாண மஞ்சள் - பூத்தால் திருமணம் நடக்கும்.
வெற்றிலை, தாமரை நீர் தோட்டம் - மகாலட்சுமி வாசம் செய்வார்.
செம்பருத்தி, அருகு - விநாயகருக்கு பிரியம்
மஞ்சள் தங்க அரளி - அம்மனுக்கு பிரியம்
வாசனை மலர்கள் செடி - நல்ல உறக்கம்
துளசி - விஷ்ணுவுக்கு
முல்லை மலர் செடி - தட்ஷினாமுர்த்தி க்கு
மஞ்சள் மலர்கள் செடி - கண்திருஷ்டி அகல
எலுமிச்சை, நெல்லி மரம் - லட்சுமி க்கு
செவ்வரளி - முருகருக்கும், தேவதைகளுக்கும்
வேப்ப மரம் - அம்மனுக்கு பிடிக்கும்
காய்கறி செடி - நம் உடலுக்கும் பர்சுக்கும் நல்லது:)

சின்ன இடம் இருந்தாலும் , திறந்த மாடியிலும் செடிகள் வளருங்கள். நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.

பயனுள்ள கட்டுரை.

எங்கள் அபார்ட்மெண்ட் கட்டும்போது, இரண்டு கேட் வேண்டும் என்பதற்காக நன்கு வளர்ந்திருந்த ஒரு வேப்ப மரத்தை வெட்டினார்கள். நான் பிலு பிலுவென்று சண்டை போட்டும் என் குரல் எடுபடவே இல்லை. ஆனால் எங்கள் வீட்டு வாட்ச்மேன் என்னைப் போலவே ஒரு தோட்டப் பித்து. இரண்டு வேப்பங்கன்றுகளை கேட்டுக்கு வெளியே நட்டு வைத்தார். ஆறே வருடங்களில் அவை தழைத்து வளர்ந்து, பலரும் மதிய வேளையில் இளைப்பாற உதவுகிறது. எங்கள் அபார்ட்மெண்ட்டை அடையாளம் சொல்லவும் உதவுகிறது. அதனால் இங்கே கூறப்பட்ட செடிகள் தவிர, வேப்பங்கன்றுகளையும் நடலாம்

மங்கை சிறப்பா சொல்லி இருக்கீங்க.அதோடு நம்மை சுற்றி இது போன்ற மரங்கள் செடி கொடிகள் இருக்கும் போது நமக்கு எப்போதும் உற்சாகம் கிடைக்கும்.நல்ல எண்ணங்கள் மேலோங்கும்....

வன மஹோத்சவம் அதாங்க மரம் நடு விழா என்று ஒன்று கொண்டாடுவாங்களே எப்போ? அடுத்த மாதமா?
மரம் வச்சா தண்ணி ஊத்தனும்
தன்ணி தண்ணி காட்டுதே!
வீட்டுக்கு ஒரு மரம் வைத்து வளர்த்தாலே போதும்
கொஞ்சம் மழை பெய்யும்.

கோல்டன் போட்டோஸ்: மணி பிளான்ட் தானே?

துளசி செடியை தவற விட்டுவிட்டார்கள்.

mani plant veettil valarthaal panam peruhum enroru nambikkai iruppathaal athiha veeduhalil parkka mudihirathu. athepola marra chedihalukkum nalla saithi sonnaal ellaach chedihalaiyum ellor veetilum parkkalaam.

வீட்டிகொரு மரம் வளர்ப்போம் ....முதலில் வீட்டை கொடுங்கள்

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் ....மரம் வைக்க வேண்டிய அரசாங்கம் .."மக்களுக்கு ' தண்ணிய ஊத்துது

All these are kept inside most of the companies on OMR.

தமிழ்நாட்டில் இந்த செடி கொடிகளையும்,நம்ம மரம் வெட்டி அய்யா,கண்ணில் படாம பாத்துக்கனும்,அதுதான் மிகவும் முக்கியம்....

இவை அனைத்தும் நர்சரியில் கிடைக்கும்,இதோடு இருக்கும் இடங்களில் மரம் நடுவதும் சிறப்பு,அப்போதுதான் நாம் பூமிக்கு செய்த கெடுதல்களை
30வருடங்களிலாவது சரி செய்தவர்களாவோம்......

இயற்கை சார்ந்த செய்திகள் அதிகம் வெளியிடுவதின் மூலம் எதிர்கால சந்ததியர்க்கு பயன் அளிக்கும.

வீட்டுக்கொரு மரம் , நாட்டுக்கு ஒரு ராமதாஸ்

இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்! இது போன்ற சுற்று சூழலுக்கு நன்மை விளைவிக்கும் எளிய வழிகள் மற்றும் தகவல்களை தொடர்ந்து வழங்க வேண்டுகிறோம்.

நர்சரில பொய் கேட்டால் வாங்கிண்டு வந்தாவது கொடுப்பான்.

பயனுள்ள அரிய குறிப்புக்கள், நன்றி.

கிடைக்கும் இடம் பற்றிய தகவலும் கொடுதிருந்தால் நன்றாகirukkum