Saturday, 15 March 2014

நல்லா இருக்கீங்களா?
இயக்குநர் வெற்றிமாறன்
'எனக்கு எதிரியே இல்லை...’ என்று எண்ணும் ஒரு மனிதன் உதிர்க்கும் வார்த்தை... 'நல்லா இருக்கீங்களா’. இந்த ஒரு வார்த்தை போதும்.  வாஞ்சையோடு வாழ்வில் நடந்த சந்தோஷத் தருணங்களையும், சோக நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ள வைக்கும். வெற்றிப் படங்கள் தந்து,  விருதுகளைக் குவித்த இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து, 'நல்லா இருக்கீங்களா’ என்றோம்...
'நடுவுல கொஞ்ச காலம் நல்லா இல்லாம இருந்து... இப்ப ரொம்ப நல்லா இருக்கேன். சின்ன வயசுல அறியாமையில் செய்யும் சில தவறான பழக்கங்கள், காலம் கடந்துதான் அதன் பாதிப்பை நமக்கு உணர்த்தும். அதில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டு மீண்டிருக்கேன். அதனாலேயே நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.... அந்தப் பழக்கம் சிகரெட்.
பள்ளிக்கூடத்தில் படிக்கிறப்ப ஆரம்பிச்ச பழக்கம். காரணம், என்னன்னு சரியா சொல்லத் தெரியலை. 13 வயசுல முதல் சிகரெட். சின்ன வயசுல வீட்டுல மறைச்சுவைக்க ஈஸியா இருக்கும். அன்னைக்கு அது சந்தோஷமான ஒண்ணாத் தெரிஞ்சது. சிகரெட் இல்லாம ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாமப்போறப்பதான், அதுக்கு அடிமையாகி இருக்கோம்னு தோணுச்சு. ஒரு நாளைக்கு 190 சிகரெட் பிடிக்கும் நிலைமைக்கு வந்துட்டேன்.''
''கேட்கவே அதிர்ச்சியா இருக்கே..?''
''இன்னொண்ணு சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... ஒரே ராத்திரியில் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்.
'கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திக்க’னு அம்மாவும் நண்பர்களும் பலமுறை சொல்வாங்க. அப்பல்லாம் யார் பேச்சையும் கேக்கலை. ஆனா, திடீர்னு எனக்கே தோணுச்சு... சட்டுனு நிறுத்திட்டேன். யார் என்ன சொன்னாலும், நம்ம மனசு என்ன சொல்லுதோ... அதைத்தான் நாம செய்றோம்ங்கிறது என் விஷயத்தில் ரொம்பவே சரியா இருந்தது. நிறுத்தின முதல் நாள், ரொம்பக் கஷ்டமா இருந்தது. நிறையக் கோபப்பட்டேன்.
சிகரெட் பிடிக்கணும்னு தோணும்போதெல்லாம், ஜில்லுன்னு தண்ணீரை நிறையக் குடிப்பேன். எனக்குப் பிடிச்ச விஷயத்தைப் பத்தி யோசிப்பேன். முதல் மாசம் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அடுத்த ரெண்டு மாசம் இன்னும் கஷ்டமா இருந்தது. மூணாவது மாசம் கடந்ததும் நிறுத்த முடியும்னு நம்பிக்கை வந்தது.''
''மறுபடியும் எப்பவாவது சிகரெட் பிடிக்கணும்னு தோணுச்சா?''
''அய்யோ... தினம் தோணும் பாஸ். சிகரெட்டை நிறுத்துறது ஈஸி. அதை மறுபடியும் பிடிக்காம இருக்க, தினம் போராடிக்கிட்டே இருக்கணும். இடையில இரண்டு முறை கட்டாயம் வேணும்னு மனசு சொல்லுச்சு.''
''அப்ப என்ன பண்ணீங்க..?''  
''மதுரையில் 'ஆடுகளம்’ பட ஷூட்டிங். ரொம்பக் கோபத்தில் இருந்தேன். என் உதவி இயக்குநர்கிட்ட சிகரெட் வாங்கிட்டுவரச் சொன்னேன். 'இதோ வாங்கிட்டு வர்றேன்’னு போனவன் ரொம்ப நேரம் ஆகியும் வரவே இல்ல. கோபமாகி இன்னொரு உதவி இயக்குநர்கிட்ட கேட்டேன். அவனும் சிகரெட் பிடிக்கிறவன்தான். 'என்கிட்ட இல்ல சார்... கடைக்குப் போய் வாங்கிட்டு வரட்டுமா?’னு மழுப்பினான். போங்கடான்னு நானே வண்டியை எடுத்துக் கிளம்பிட்டேன். அப்புறம் என் நல்லதுக்குத்தானே அவனுங்க தயங்கி நின்னாங்கன்னு தோணுச்சு. சரி... காலையில பார்த்துக்கலாம்னு மனசு சொல்ல, நல்லாத் தூங்கி எழுந்தேன். அப்புறம் எதுவும் தோணலை.''
''சிகரெட் பிடிச்சா கற்பனை வளம் பெருகும்னு சொல்றாங்களே..?''
''அதெல்லாம் எதுவும் வராது. சும்மா அது ஒருவித போதை. புதுசா ஓர் அனுபவம் கிடைக்கிறப்ப, புது இடங்களுக்குப் போறப்ப, டென்ஷனா இருக்கறப்ப 'தம்’ அடிக்கணும்னு தோணும். இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு காரணத்தை வைச்சு நிக்கோட்டினுக்கு அடிமையாகுறாங்க. குறிப்பா பள்ளி, கல்லூரி வாழ்க்கையில்தான் தவறு நடக்குது. அந்தக் கட்டத்தை ரொம்பக் கவனமா கடந்து வரணும்.''
''இப்ப எப்படி உணர்றீங்க சார்?''
''ஸ்மோக் பண்றதை நிறுத்தி அஞ்சு வருஷம் ஆகுது. ரொம்ப நிம்மதியா இருக்கேன். முன்பெல்லாம் அடிக்கடி டீ குடிப்பேன். இப்ப அதையும் நிறுத்திட்டேன். இப்போ கிரீன் டீ குடிக்கிறேன்.
கொஞ்ச காலமா ஜிம்ல வொர்க்அவுட்ஸ் பண்ணிட்டு இருக்கேன். பெரும்பாலும் காலையில் சத்துமாவில் செஞ்ச தோசை, இட்லி. மதியம் குறைவான அளவு சாதம், அதிகம் காய்கறிகள் சாப்பிடுறேன். கிரீன் ஆப்பிள், பழங்கள் எடுத்துக்கிறேன்...'' என்கிற வெற்றிமாறன், அன்பானவர்களுக்குச் சொல்லும் விஷயம்:
''ஒருமுறை நிக்கோடினுக்கு அடிக்ட் ஆகிட்டா, அது, வளர்ச்சிப் பாதைக்குப் பெரும் தடையா இருக்கும். செய்யும் வேலையில் ஒழுங்கு இருக்காது. எதையும் நேரத்துக்குச் செய்ய முடியாது. புகைபிடிக்கும் நினைப்பு, நிழல் மாதிரி கூடவே வரும். அதனால், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும் குடும்பத்தின் மீது பற்றுதலும் இருந்தால் சிகரெட்டைத் தொடாதீங்க... உடனடியாக நிறுத்தும் முயற்சியைத் தொடங்குங்க!''  
புகழ் திலீபன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
 சிகரெட்டை மறக்கடித்த 'சீக்ரெட்’!
ஸ்மோக் பண்றதை நிறுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல, சுத்தி இருக்கிறவங்ககிட்ட, 'சிகரெட் பிடிக்கிறதை நிறுத்தப்போறேன். நிறையக் கோபப்படுவேன். பொறுத்துக்கங்க’னு முன்கூட்டியே சொல்லிடுங்க. நம்மைச் சுத்தி இருக்கிறவங்கதான் நமக்குப் பலம். அவங்களோட ஒத்துழைப்பு இல்லாம எதுவும் முடியாது.
ஸ்மோக் பண்றதை நிறுத்தும்போது, முதல் நாள் நல்லாத் தூங்குங்க. நிறையப் பசி எடுக்கும். ரொம்பக் கோபம் வரும். அதுபோக்குல விடுங்க.  
ஒரு எதிரியைப் பார்க்கிற மாதிரி நிக்கோட்டினைப் பாருங்க. ஜிம் போய் நிறைய வொர்க்அவுட்ஸ் பண்ணுங்க. புகையை நிறுத்த அதுவும் உதவியா இருக்கும்.  
நெருக்கமான இடங்களைத் தவிர்த்து, நல்ல இயற்கைச் சூழலை ஏற்படுத்திக்குங்க.
எனது அஞ்சல் தலை!
செ.திலீபன், படம்: உசேன்
நீங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகியாக இருக்கத் தேவையில்லை. உலக சாதனைகள் பல படைத்த இந்தியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அட... அவ்வளவு ஏங்க... 'தமிழன்’ பட விஜயாகக் கூட இருக்க வேண்டாம். ஆனால், உங்கள் முகமும் இந்தியத் தபால்தலையில் இடம்பெறும்!
'அந்த அளவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலையே!’ என்று நீங்கள் பதற வேண்டாம். தபால் துறை சேவைகளை அனைவரும் பயன்படுத்த, துறையின் லாபத்தை உயர்த்த உங்கள் முகம் பொறித்த தபால் தலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது இந்தியத் தபால் துறை. திட்டத்தின் பெயர் 'எனது அஞ்சல் தலை’!  
திட்டத்தை விரிவாக விளக்கினார் சென்னை துணைத் தலைமை அஞ்சலக அதிகாரி தாமோதரன். ''ஏற்கெனவே உத்தரப்பிரதேசம் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களில் 'எனது தபால் தலை’ திட்டம் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களின் புகைப்படத்தைத் தபால் தலையாக வெளியிட்ட பரிசோதனை முயற்சி வெற்றிபெற்ற பிறகே,  இப்போது தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறப்புத் தபால் தலைச் சேகரிப்பு மையங்களில் ஒரு விண்ணப்பம் வாங்கி, அதைத் தெளிவாகப் பூர்த்திசெய்ய வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், உங்கள் புகைப்படத்தை இணைத்து விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் விண்ணப்பத்தைச் செலுத்திய நாளில் இருந்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் உங்கள் புகைப்படத்தில் அச்சடிக்கப்பட்ட 12 தபால் தலைகள் உங்கள் வீடு தேடிவரும். இதை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம்!'' என்றார்.  
தபால் துறையை மேம்படுத்த, நம் முகத்திலும் போஸ்ட் ஆபீஸ் சீல் குத்து விழ, உங்கள் காதலனோ, காதலியோ, குழந்தையோ 'அட!’ என்று ஆச்சர்யப்பட, நீங்களும் ஒரு தடவை விண்ணப்பம் செய்யலாமே?

COMMENT(S): 20


நல்ல கூத்து ....
இனி கட்சிகள் தங்கள் தேர்தல் சின்னத்தில் தபால் தலை அச்சடித்து அந்த கவரில் பணமும் வைத்து வீடு வீடாக இரவில் செருகி வைக்கலாம்...
விளம்பரம் என்றால் ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடிக்கும்! எனவே, தபால் துறைக்கு வருமானம் அதிகரிக்க, தன் படம் போட்ட ஸ்டாம்பை இலவசமாக "அம்மா ஸ்டாம்ப்" வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யலாம்.
எனது குழந்தைகளின் படம் வெளியிட அரசின் அடையாள (படத்துடன்) அட்டைக்கு எங்கே போகட்டும்...
நம் முகத்திலும் போஸ்ட் ஆபீஸ் சீல் குத்து விழ,******** கருணா, மன்னுமோகன், சோனியா படங்கள் பொருத்தாமா இருக்கும்.
அப்படியே, கரன்ஸியிலும் நம்ம படத்தை போட்டுக்கலாமா ?
Good finally we copied 1 useful Idea from countries like Singapore.
300க்கு 12 என்றால் ஒரு ஸ்டாம்பின் விலை ரூ.25ஆ... இல்லை அதற்க்கு விலையே கிடையாதா...நம் அழகு முகம் வெளியே தெரியாத மாதிரி போஸ்ட்மன் சீல் குத்துவாரா...
நான் சே.குவேரா வின் ஸ்டாப் வாங்க ஆசைபடுவேன்.....
பிடித்தவர்கள் ஸ்டாம்ப்பை நக்கி ஒட்டலாம். பிடிக்காதவர்களை காறித்துப்பி ஒட்டலாம்.
தமன்னா, நமீதா போன்ற, நடிகைகளின் படம், அதுவும், கவர்ச்சியாக வெளியிட்டால்.... பசையே வேண்டாம்... ஒட்டறதுக்கு ஜொள்ளு போதும்...
இப்போதெல்லாம் மேஜை கேலண்டர்கள், குழந்தைகளின் புத்தக லேபிள்கள் , இவற்றிலெல்லாம் நம் புகைப்படங்களை பிரிண்ட் ஒட்டிக் கொள்ளும் வசதி வந்து விட்டதே.. இருந்தாலும், தேசிய அளவில் செய்யப்படும் ஒரு சேவையை, பெரிய தலைவர்களையும் நிகழ்ச்சிகளையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வெளியிடப்படும் தபால்தலைகளை சாதாரண மக்களின் படங்களுடன் வெளியிடுவது ஏற்புடையதாயில்லை.
ஈமெயிலும் , செல்போனும் நாளுக்குநாள் புதிய கோலத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில் தபால் துறையின் வருமானத்தை பெருக்க நல்ல உத்திதான்.
வரலாறு முக்கியம் அமைச்சரே....என்ற வசனம் தான் நினைவிற்கு வருகிறது 
நல்ல காபி. stamps.com.
கனடாவில் நம்ம தமிசர்கள் பிரபாகரனின் போட்டோவை ஸ்டாம்ப் செய்து கொள்வார்கல். நம்ம தமிளர்கள் இன தலிவர் கருணாவின் போட்டோவை ஸ்டாம்பாக செய்து அவருக்கு நன்ரி சொல்லலாம். இதில் வருமானம் வந்தால் அவருக்கு 80% கமிசன் கொடுத்துடலாம்.
''சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாம்..!''
செங்கல்பட்டில் ஈழத் தமிழர்கள்

''செங்கல்பட்டு, பூந் தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்​வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்த அளவுக்கு நாங்கள் சித்ரவதைகளை அனுபவிக்​கி றோம்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்! 
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக  சில மாதங்களுக்கு முன், ஈழத் தமி ழர்கள் உண்ணாவிரதம் இருந்​தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்த​குமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்ற உண்ணா​நிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்​பாளர் ஈழ நேரு இதுகுறித்து நம்மிடம் பேசினார். 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதா னவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது. அந்த வழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பிறகும் மத்திய அரசுக்குக் கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள். அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கி​றார்கள்'' என்றார்.
உண்ணாவிரதத்தில் இருக்கும் தவதீபனிடம் பேசினோம். ''திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பெருமாள்புரம் முகாமில் இருந்த என்னைக் கைதுசெய்து இங்கே அடைச்சிருக்காங்க. நான் தினக்கூலி வேலைக்குப் போவேன். நான் வேலைக்குப் போனால்தான் எங்க குடும்பத்தில் எல்லோரும் சாப்பிட முடியும். நான் வெளிநாடு போக முயற்சி செஞ்சதாக என் மீது பொய் வழக்குப் போட்டிருக்காங்க. நாங்க 22 வருடங்களா இங்கேதான் இருக்கோம். இங்கிருந்து எங்கேயும் போகவும் மாட்டோம். அப்படி இருக்க போலீஸ், இங்கிருக்கும் ஒவ்வொருத்தர் மீதும் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போடுறாங்க. முகாமில் என் குடும்பம் சாப்பிடாமல் இருக்கும்போது, நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இந்திய அரசு எங்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சொந்த மண்ணை​விட்டு அகதியாகக் கிளம்பியபோது எம் மக்களோடு வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் தமிழகம் வந்தோம். இங்கு இருக்கும் மக்க​ளால் எங்களுக்கு எந்தப் பிரச் னையும் இல்லை. ஆனால், அதிகாரி​கள் எங்களை குற்ற​வா ளிகளாகவே பார்க்கிறார்கள். இங்கு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்​போது, சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன் றுகிறது'' என்று கண் கலங்குகிறார்.
உண்ணாவிரதம் இருப்பவர்​களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ர​மணியன் ஆகியோர் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் பேச்சு​வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணா​விரதம் தொடர்கிறது.
பேச்சுவார்த்​தைக்குச் சென்ற தாசில்​தார் இளங்கோவன், ''இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடி​யாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்​கொள்​ளுங்கள்'' என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்பு​கொண்​டும் நம்மிடம் பேசு​வதைத் தவிர்த்து​விட்டார்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்​பட்ட​வர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசா​ரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்​கை​களுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதர​வாளர்கள்.
என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
- செ.திலீபன்

COMMENT(S): 32

அவர்களுக்கு இங்கு என்ன வேலை? உடனடியாக திரும்பலாமே. கனடாவை கெடுத்தது போல், கெடுத்து விடுவார்கள். அவர்களுக்கு,சீங்களவன் தான் சரி. உலகத்தில், எந்த நாட்டிற்கு சென்றாலும்,இவர்கள் தொல்லையே.லண்டன் இவர்களுடைய அட்டகாசத்தை இன்னமும் பொறுக்காது என்று தெரிகிறது.
சந்துரு அவர்களே,

நீங்கள் முதலில் கனடாவில் வசிப்பவரா? நான் ஒரு தமிழ்க்கனேடியன். கனடா ஈழத்தமிழர்களால் எந்த அளவிற்கு கெட்டிருக்கிறது என்று விவரித்தால் நன்றாக இருக்கும்.

நீங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக பதிவதெல்லாம் குப்பை. டொராண்டோவும், லண்டனும் ஈழத்தமிழர்களால் எந்த அளவிற்கு பாதிக்கப்படீருக்கிறது என்று எந்த மீடியாவிலும் செய்திகள் இல்லாதபோது ஏன் இப்படி வெறுப்பினை உமிழவேண்டும். சொல்லப்போனால் படு டாம்பீகமாக உரை நிகழ்த்தச்சென்ற ராஜபக்ஷே இவர்களது ஆர்ப்பாட்டங்களினாலும் தொடர் முற்றுகையினாலும் லண்டனிலிருந்து பார்சல் வண்டியின் மூலம் விமான நிலையத்திற்கு பொட்டலமாக கட்டி தகுந்த மரியாதையுடன் வீடனுப்பப்ப்ட்டார். அதற்காக உங்கள் அடிவயிறு குமைகிறதா என்ன?

நீங்கள் கனடாவிலிருப்பவர் என்றால் உங்களுக்கு அங்கு என்ன வேலையோ அது போலத்தான் அங்கிருக்கும் ஈழத்த்மிழர்களுக்கும். நீங்கள் முடிசூடா மன்னனாக தமிழநாட்டிற்கு திரும்பி தொடர் மின்வெட்டினாலும், குடிநீர் பற்றாக்குறையினாலும், சாக்கடை நிரம்பும் குப்பைகூளத்தில் டெங்கி கொசுக்களுடன் கம்பீரமாக வாழலாமே? செய்யுங்களேன். வெட்கி தலை குனியவேண்டிய நீங்கள் (இதில் என்னையும்தான் நான் சேர்த்துக்கொள்ளவேண்டும்) என்னவோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கதை விடுகிறீர்கள்.
என்ன அட்ட காசம் செய்கிறார்கள் என்று சொல்லலாமே.
என்ன அட்ட காசம் செய்கிறார்கள் என்று சொல்லலாமே.
இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழர்களால் இந்தியத்தமிழன் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறான் என்று திருச்சியில் வந்து பார்த்தால் தெரியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் லண்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அனுப்பும் லட்ஷக்கணக்கான பணத்தைக் கொண்டும் மற்றும் கடத்தல் வழிகளில் கிடைக்கும் பணத்தில் அண்ட வந்த ஊரையே வளைத்து போட்டு வருவாய்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, என அனைத்து துறைகளையும் விலை பேசி பத்திரப்பதிவுத் துறையிலும் கோலோச்சிக் கொண்டு, காலி மனை, வீடு. வீட்டு வாடகை, மீன், மட்டன் என அனைத்து பொருட்களும் சாதாரண மக்களால் வாங்க இயலாத நிலையை ஏற்படுத்தியும் வருகின்ற நிலை இலங்கை தமிழன் பெயரைச்சொல்லி பணம் பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்தும் பணம் வந்தால் போதும் என ஊமையாய் இருக்கின்ற்னர். கே.கே.னகர், சீனிவாச நகர் போன்ற பகுதிகளில் செயின் பறிப்பு, பெண்களை கேலி செய்தல், பாரில் அடிதடி, லட்சரூபாய் மதிப்புள்ள டூ வீலரில் அளவுக்கு அதிக வேகத்தில் செல்வது, சட்டத்தை மதிக்காத தன்மை, காவல் நிலையத்தில் செல்வாக்கு என இந்தியத்தமிழனை கேவலப்படுத்தி வசதியாக வாழ்ந்து தமிழனை துச்சமாக பாவித்து வரும் இவர்களை தொப்புள்கொடி உறவு, மண்ணாங்கட்டி என எழுதி நீங்களும் வக்காலத்து வாங்குவது சரியாக படவில்லை. அகதிகள், அண்ட வந்தவர்கள், ஒண்ட வந்தவர்கள் திரும்ப அவர்களது ஊருக்கே செல்ல வேண்டியது தானே. அகதி போர்வையில் ஆடம்பர வாழ்வு, உண்ணாவிரதம், போராட்டம் தேவையா. விரைவில் தமிழ் நாட்டில் தமிழன் அகதியாக நேரிடும்.
ஊருக்கு திரும்பி போலாமே..
லலிதா அவர்களே இவர்கள் பூர்வீகம் தமிழகம் அல்ல.இலங்கை.தமிழ்கத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் மலையக தமிழர்கள் இன்னும் இலங்கை தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகள் போல் நடத்தபடுபவர்கள். இங்கே உள்ளவர்கள் திருப்பி அனுப்பபட வேண்டியவர்கள். அரசு ஏன் இன்னும் இதை செய்யாமல் உள்ளது என்பது கேள்விக்குறி. ஜூவி யும் சும்மா தொப்புள் கொடி முல்லை கொடி என்று சென்டிமென்டாக எழுதிகொண்டு ஈழ வியாபாரிகளுக்கு துணை போய் கொண்டிருக்கிறது.
இவர்களை வேலை செய்து பிழைத்து கொள்ள சொல்ல வேண்டியது தானே? வேலை செய்ய ஆள் இல்லாமல் அசாமிலிருந்து வந்து வேலை செய்கிறார்கள்.
கஷ்டப்பட்டாவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா? ஓடிச் செல்ல வேண்டியதுதானே பிறந்த ஊருக்கு? ஒண்ட வந்தது நாட்டாமை செய்கிறது.
20 வருடங்களா இருக்கும் இவங்களை ஏன் இப்படி சித்ரவதை செய்ராக. இவர்களின் பூர்வீகம் தமிழ்னாடுதானே ,மனிதனை மனிதனாக பார்க்கவே மாட்டாங்களா, பல சமயம் காவல்துரை தன்னை மக்களீன் நண்பன் என்ரு சொல்லிக்குது ஆனால் உண்மைலே>>
போர் என்ட்ரால் மக்கள் சாவத்தானே செய்வார்ர்கள் என்ற பொன்மொழி ய அவுத்துவுட்ட ஆட்சி யில வேற என்ன செய்யமுடியும்
"என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!"...என்ன்ய்யா கதவிடுற...கொடி உறவும் இல்லை பொடி உறவும் இல்லை...தொப்புளாவது கொப்புளவது...போட்சொல்லுயா ஊறப்பாத்து...!
போய் பாருங்கப்பு.. சிங்களவன் அடிப்பான் ஆப்பு... ஓடுங்க ஒடுங்க..
தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர்களை மனிதநேயதுடன் நடத்துவதில்லை என்ற குறைபாடு நிரந்தரமான ஒன்று. ஈழத்திலுள்ளோரைப் பற்றி காவலைப் படுவதோடு இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாமே.
இவங்களை தமிழகம் கண்டுகொள்ளவில்லை.....தமீழீழ ஆதரவு தலைவர்களும் கண்டுகொள்ளமாட்டார்கள்....

இவர்களிடம் டாலர் இல்லையே....

சைமன்களும்,நைனாக்களும்... எப்போதும் வானத்தையே அன்னாந்து பார்ப்பார்கள்..... கீழே குனிந்து பார்க்கும் எண்ணமே இல்லை....

தமிழகத்தில் யார் ஆட்சிக்கு(தி.மு.க மற்றும் அ.தி.மு.க ) ஈழமக்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை, தேர்தல் சமயத்தில் மட்டுமே ஈழமக்களின் நலன் பற்றி பேசுவார்கள்.

தமிழர் நலன்கள் மீது உண்மையான அக்கறை உள்ள கட்சியின் ஆட்சி அமைக்க தமிழகமக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்
ஈழத்தில் யுத்தம் முடிந்துவிட்டது... தமிழகத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் விரும்பினால் இலங்கைக்கு செல்ல நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்... அல்லது அவர்கள் விரும்பினால் இந்தியக்குடியுரிமை பெற்று இங்கேயே வாழ வழிவகை செய்யவேண்டும்... இப்படியா போட்டு கொடுமைப்படுத்துவது?...
என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!

அப்படி ஏதாவது இருக்கா?

பொங்கள் போனஸ் போட்டாச்சா? தீபாவளி அரியர்ஸ் வந்துடுச்சா?

லஞ்சக்காசுல தீவு ஏதாவது விலைக்கு கிடைக்குமா?